வெள்ளையர்களை போல் மோடியும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்! மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்

 
Published : Jul 31, 2018, 03:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
வெள்ளையர்களை போல் மோடியும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார்! மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்

சுருக்கம்

Mamata Banerjee charge pm modi

அசாம் மாநில குடிமக்கள் பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் விடுபட்டுள்ள விவகாரத்தில் பாஜக., பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம், பீகார் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில், அருகில் உள்ள அசாம் மாநிலத்திற்கு ஏராளமானோர் குடியேறி வசிப்பதாக, புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாநில மக்களுக்காக வரைவுப் பதிவேடு ஒன்றை தயாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. 

இதன்படி, தற்போது அந்த வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த மாநில மக்கள் தொகையில், 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக மீது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘’அரசியல் சூழ்ச்சி மூலமாக, மக்களை பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 

வங்கதேசம் பெயரை சொல்லி அசாமில் உள்ள பீகார் மற்றும் மேற்கு வங்கம் மாநில மக்களை வெளியேற்றவே இந்த செயலை பாஜக மேற்கொண்டுள்ளது. வாக்கு வங்கியை பிரித்து, செல்வாக்கை நிலைநிறுத்தவும் பாஜக இப்படி செயல்படுவது தவறு. இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி.,க்கள் குழு ஒன்றை அசாம் மாநிலத்திற்கு அனுப்பி கள நிலவரம் பற்றி ஆய்வு செய்வோம், என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் ஒரே நாட்டின் மக்களை பிளவுபடுத்த உதவும் என்றும், இத்தகைய பிரிவினைவாத அரசியலை பாஜக கைவிட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் குறிப்பிட்டுள்ளன. அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, தேசநலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
காலையிலேயே வந்த ஷாக் நியூஸ்.. ஆம்னி பேருந்து தீப்பிடித்து 10 பேர் உடல் கருகி பலி!