
ஞாயிற்றுக்கிழமை ஏசியாநெட் நியூஸ் கோழிக்கோடு அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையின் பின்னணியில் உயர்மட்ட அரசியல் அழுத்தம் இருந்தது தெரியவந்துள்ளது. உயர் அதிகாரிகளின் கடுமையான அழுத்தம் காரணமாக கோழிக்கோடு நகர காவல்துறை சட்ட நடைமுறைகளைத் தவிர்த்துவிட்டு சேனலின் பிராந்திய அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது.
ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் சென்று சோதனையிட்டு கம்ப்யூட்டர்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோழிக்கோடு போலீசாருக்கு உத்தரவு வந்திருக்கிறது. ஆனால் உயர்மட்ட உத்தரவின்படி காவல்துறை அதிகாரிகள் கணினிகளைக் பறிமுதல் செய்யவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆதரவு பெற்ற எம்எல்ஏ பி. வி. அன்வர் காவல்துறை டிஜிபியிடம் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு இடத்தில் விதிமீறல் நடந்தால் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். ஆனால், அத்தகைய புகாரில் எஃப்ஐஆர் பதிவு செய்த பின்புதான், காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலில் புகார் கொடுத்தவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்ய வேண்டும். ஆனால் அதைக்கூட காவல்துறை பெறவில்லை. நவம்பர் 2022 இல் ஏசியாநெட் நியூஸ் வெளியிட்ட போதைப்பொருள் எதிர்ப்புப் செய்தியில் குறிப்பிடப்பட்ட வழக்குக்கும் எம்.எல்.ஏ பி. வி. அன்வருக்கும் நேரடியாகத் தொடர்பு இல்லை.
போலி வீடியோக்களை நம்பாதீர்கள்: லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் வேண்டுகோள்
புகார்தாரரின் வாக்குமூலம் பெறப்பட்டு, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால் அன்வரின் தரப்பில் எழுத்துபூர்வ புகாரைக்கூடப் பெறாமல் ஏசியாநெட் செய்தி அலுவலகத்தைச் சோதனையிட போலீஸார் வந்தனர்.
கோழிக்கோடு கமிஷனர் அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்துக்கு போலீஸார் ஆய்வுக்கு வந்ததாகத் தெரிகிறது.
ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை விரைவில் சோதனையிடுமாறு கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடமிருந்து முதற்கட்ட தகவல்களைச் சேகரித்த போலீசார், கம்ப்யூட்டர்களைக் பறிமுதல் செய்வதைத் தவிர்த்தனர். சுமார் நான்கு மணிநேரம் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிக்கை வெளியிடுவதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.
இதற்கிடையில், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி செயலாளர் ஜானி நெல்லூர் கோழிக்கோட்டில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தில் போலீஸ் சோதனை நடத்தியது பாசிச செயல் என்று கூறியுள்ளார். கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகம் மீது எஸ்.எஃப்.ஐ வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஊடக அலுவலகத்திற்குள் புகுந்து பத்திரிகையாளர்களை பயமுறுத்துவது கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான வழி அல்ல என்று பாஜக கேரள பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் கூறினார். ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ஜவடேகர் கூறினார்.
MK Stalin: மக்கள் அரசைத் தேடி வந்த காலம் மாறிவிட்டது - முதல்வர் ஸ்டாலின் உரை