பிரதமர் கேர்ஸுக்கு நிதியுதவி; ”ஒரே நாடு ஒரே குரல்” கீதத்திற்கு ஸ்பான்சர்..! வாரி வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ்

By karthikeyan VFirst Published May 21, 2020, 7:02 PM IST
Highlights

கொரோனா ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலை எதிர்கொள்ள, இந்திய நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், பல்வேறு வகைகளில் இந்திய அரசுக்கு உதவிவருகிறது.

ஏசியன் பெயிண்ட்ஸ் இந்தியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்று.  எல்லா சூழல்களிலும் நாட்டிற்கு ஆதரவாக இருப்பதிலும் ஏசியன் பெயிண்ட்ஸ் முன்னிலையில் இருக்கும்.  அந்தவகையில், கொரோனா ஏற்படுத்தியுள்ள இக்கட்டான சூழலிலும் நாட்டின் நலனுக்கு துணை நிற்கிறது ஏசியன் பெயிண்ட்ஸ். பிரதம மந்திரி கேர்ஸ் நிதிக்கு ஏசியன் பெயிண்ட்ஸ் நிதியளித்து உதவியுள்ளது. அதன் ஒருபகுதியாக கொரோனாவை எதிர்த்து போராடும் கள போராளிகளுக்கு அர்ப்பணிக்கும் விதமாக, ஒரே நாடு ஒரே குரல் என்ற புதிய கீதம் ஒன்று பாடப்பட்டுள்ளது. 

ஜெயத்து ஜெயத்து பாரதம் என்ற தலைப்பில் பாடப்பட்ட அந்த கீதத்தை வாசுதேவ் குடும்பாக்கம் கடந்த 17ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்திய பாடகர்கள் உரிமைகள் சங்கத்தில் உள்ள பல்வேறு மொழி பாடகர்கள் 200 பேர் இதில் பாடியுள்ளனர். 14 மொழிகளில் பாடப்பட்ட தேசத்தின் மிகப்பெரிய கீதம் இது. 

கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த நெருக்கடியான சூழலில், ஒற்றுமையை உணர்த்தும் விதமாக இந்த கீதம் பாடும் முன்னெடுப்பை பின்னணி பாடகர்கள் சோனுநிகம், ஸ்ரீநிவாஸ், சஞ்சய் டந்தான் ஆகிய மூவரும் முன்னெடுத்தனர். இந்த பாடலை 200 பாடகர்களும் தங்களது வீடுகளில் இருந்தபடியே பதிவு செய்தனர். அனைத்து பாடகர்களின் வீட்டிலும் பாடலை பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப வசதி இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அனைவரும் பாடியுள்ளனர்.

14 மொழிகளின் பிரபலமான பின்னணி பாடகர்களான ஆஷா போஸ்லே, அனுப் ஜலோடா, அல்கா யாக்னிக், ஹரிஹரன், கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சானு, மகாலக்‌ஷ்மி ஐயர், மனோ, பங்கஜ் உதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஷான், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே, சுரேஷ் வாட்கர், ஷைலேந்திர சிங், ஸ்ரீநிவாஸ், தலத் அஜீஸ், உதித் நாராயணன், ஷங்கர் மஹாதேவன், ஜஸ்பீர் ஜஸ்ஸி, மேலும் 80 பேருக்கு மேல் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். 

இந்த கீதத்தை உருவாக்குவதில் ஏசியன் பெயிண்ட்ஸின் பங்கு குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் தலைவரும் சி.இ.ஓ-வுமான அமித் சிங்க்ளே, ஏசியன் பெயிண்ட்ஸ் எப்போதுமே பொறுப்புள்ள ஒரு நிறுவனமாகவே திகழ்ந்துவருகிறது. சில சிறந்த நடவடிக்கைகளை எடுக்க, கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த நெருக்கடியான சூழலைவிட சிறந்த நேரம் கிடைக்காது. இந்தியாவின் மிகச்சிறந்த பிரபலங்களாக திகழும் 200 பேரின் வீடுகளிலிருந்தே அவர்களின் சிறந்த குரல்களுக்கு சக்தி கொடுத்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். 

பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் இந்திய மக்களுக்கு உதவுவதை நினைத்து, ஒரு இந்திய நிறுவனமாக மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ”ஒரே நாடு ஒரே குரல்” என்பது வெறும் பாடல் அல்ல; இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இயக்கம். கொரோனா சூழலை மேலும் நம்பிக்கையுடனும் கூடுதல் வலுவுடனும் எதிர்கொள்ள இந்திய மக்களை இது உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம் என்று அமித் தெரிவித்துள்ளார்.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பிரதமர் கேர்ஸ் நிதி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களின் நிதிக்கும் ரூ.35 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ”ஒரே நாடு ஒரே குரல்” என்ற இந்த கீதம், டிவி, ரேடியோ, சமூக வலைதளங்கள், அப்ளிகேஷன்கள், ஓடிடி, விஓடி, ஐஎஸ்பி, டிடிஎச்,  சிஆர்பிடி உட்பட மொத்தம் 100 தளங்களில் வெளியாகியுள்ளது. அதன்மூலம் வரும் அனைத்து வருவாயும் அப்படியே பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படவுள்ளது. இந்த பாடல், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, காஷ்மீரி, அஸ்ஸாமி, சிந்தி, ராஜஸ்தானி, ஒடியா, போஜ்பூரி ஆகிய 14 இந்திய மொழிகளில் பாடப்பட்டுள்ளது.
 

click me!