ஓவைசி கார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.. உ.பி.யில் உச்சக்கட்ட பரபரப்பு..!

Published : Feb 04, 2022, 07:02 AM IST
ஓவைசி கார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.. உ.பி.யில் உச்சக்கட்ட பரபரப்பு..!

சுருக்கம்

கடந்த  ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி  5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால், தான் பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்காமல் போனது. இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தலிலும்  ஏஐஎம்ஐஎம் கட்சி களமிறங்கி உள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் முடித்துக்கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி வாகனம் மீது 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த  ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி  5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால், தான் பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்காமல் போனது. இந்நிலையில், உத்தரபிரதேச தேர்தலிலும்  ஏஐஎம்ஐஎம் கட்சி களமிறங்கி உள்ளது. அம்மாநிலத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 20 சதவீத இஸ்லாமிய வாக்குகளை குறிவைத்து களமிறங்கியுள்ள ஓவைசி, அதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிக்கொண்டிருந்த போது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், ஓவைசி அதிஷ்டவசமாக உயிர் தப்பியதையடுத்து அவரது கார் டயர் பஞ்சரானது. அந்தக் காரை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு காரில் டெல்லி வந்தடைந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!