
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு நீரிழிவு நோயும் உள்ளது.
நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் கலந்து கொண்ட அவர், நேற்று டெல்லி திரும்பினார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, இதனால், அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு ரத்த கொதிப்பும் அதிகளவில் உள்ளது.
அலோபதி சிகிச்சையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், அரவிந்த் கெஜ்ரிவால் இயற்கை வைத்திய முறையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார். இதைதொடர்ந்து நாளை பெங்களூர் புறப்பட்டு செல்கிறார் என ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் சிகிச்சை பெறும் அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 15 நாட்கள் தங்க இருப்பதாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர் இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த அவர், கடந்த செப்டம்பரில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொண்டையில் ஆபரேஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.