உலக வங்கி பதவி : State Bank of India-வின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பெயர் பரிந்துரை

 
Published : Oct 14, 2016, 01:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
உலக வங்கி பதவி : State Bank of India-வின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பெயர் பரிந்துரை

சுருக்கம்

உலக வங்கியின் உயர்நிலை பதவிக்‍கு, State Bank of India-வின் தலைவர் திருமதி. அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர் பரிந்துரைக்‍கப்பட்டுள்ளது.

திருமதி. அருந்ததி பட்டாச்சார்யா தற்போது State Bank of India-வின் தலைவராக பதவி வகித்து வருகிறார். உலக வங்கியில் காலியாக உள்ள மேலாண்மை இயக்‍குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆகிய பதவிகளுக்‍கு, திருமதி அருந்ததி பட்டாச்சார்யாவின் பெயர் பரிந்துரைக்‍கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன.

2016-ம் ஆண்டுக்‍கான உலகின் சக்‍திவாய்ந்த 100 பெண்கள் தரவரிசைப் பட்டியலில், திருமதி. பட்டாச்சார்யா 25-வது இடத்தில் இருப்பதாக Forbes பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்‍கது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்