சொந்த முதலமைச்சரையே சஸ்பெண்டு செய்த கட்சி… அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி….

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 07:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
சொந்த முதலமைச்சரையே சஸ்பெண்டு செய்த கட்சி… அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி….

சுருக்கம்

சொந்த முதலமைச்சரையே சஸ்பெண்டு செய்த கட்சி… அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி….

இந்தியாவிலேயே மிக குறைந்த வயதுடைய முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் 37 வயதான பெமா பெமா காண்டு. அருணாச்சல் மக்கள் கட்சி முதலமைச்சரான  பெமா காண்டைதான் அவரது கட்சித் தலைமை சஸ்பெண்டு செய்துள்ளது.

அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர்களைக் கொண்டது.. இதில், இரண்டு சுயேச்சை உறுப்பினர்களுடன் சேர்த்து, 47 உறுப்பினர் பலத்துடன், நபாம் துகி தலைமையில் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது.

ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலிகோ புல் தலைமையில், 30 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதலமைச்சராக பதவியேற்றார்.

இதனையடுத்து உச்சநீதிமன்ற தலையிட்ட பிறகு அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக  பேமா காண்டு கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். சவுனாமீன் துணை முதலமைச்சராக  பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில் பெமா காண்டை அவரது கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரோடு துணை முதலமைச்சர்  சவ்னா மேயின் மற்றும் 5 எம்.எல்.ஏ.,க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாகவும், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்ஜியா உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

'ஓவியங்களின் ராஜா' - ரூ.167 கோடிக்கு ஏலம் போன ரவி வர்மாவின் படைப்பு
கல்பாக்கம் அணு உலை புதிய சாதனை.. வரலாற்று மைல்கல்.. பிரதமர் மோடி பெருமிதம்!