
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் -8ந் தேதிக்கு பின், ஏறக்குறைய 60 லட்சம் தனிநபர்கள், நிறுவனங்கள் சேர்ந்து, ரூ.7 லட்சம் கோடியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்கள் என வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக சட்டவிரோதமாக டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்களின் கடந்தகால வங்கிக்கணக்கும் விசாரிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமானவரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர்கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ந் தேதிக்கு பின், அரசு நிர்ணயித்த அளவான ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பணம் டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற சட்டவிரோதமாக டெபாசிட்செய்தவர்கள் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தால் முடியாது. அவர்களின் கடந்த கால வங்கிக்கணக்கும் ஆய்வு ெசய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்ககப்படுவார்கள். அதே சமயம், நேர்மையானவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது.
எங்களுக்கு நாள் தோறும் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் பெயர்,டெபாசிட் செய்தவர்கள் முகவரி, வங்கிக்கணக்கு, தொகை ஆகியவை குறித்து வங்கியில் இருந்து அறிக்கை வந்துள்ளது. அதை வைத்து அந்த நபர்களின் கடந்தகால வரவு செலவு கணக்கும் ஆய்வு செய்து நடவடிக்கை தொடங்கும்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக, 60 லட்சம்தனிபர்கள், நிறுவனங்கள், தொழில்சாலைகள் ஏறக்குறைய ரூ. 7 லட்சம் கோடிடெபாசிட் செய்துள்ளனர். தனிநபர்கள் மட்டும் இதில் ரூ.3 முதல் ரூ.4 லட்சம் கோடிடெபாசிட் செய்துள்ளனர். இவர்களிடம் முறைப்படி விசாரணை தொடங்கும்.அதேசமயம், வரி ஏய்ப்பாளர்கள் அரசுக்கு பிரதமர் கரீப் கல்யான் யோஜனாதிட்டத்தின் கீழ் தங்கள் வரிபாக்கியை செலுத்தி தப்பிக்கலாம்'' எனத் தெரிவித்தார்.