நாட்டையே நடுநடுங்க விட்ட அந்த அதிர்ச்சி சம்பவத்தை அசால்ட்டா செஞ்ச அருண் ஜேட்லி!!

By sathish kFirst Published Aug 24, 2019, 3:01 PM IST
Highlights

உடல்நடல்குறைவால் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி அமைச்சராக இருந்தபோது தான், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அதிரடியான நடவடிக்‍கைகள் மேற்கொண்டார்.

உடல்நடல்குறைவால் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி அமைச்சராக இருந்தபோது தான், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அதிரடியான நடவடிக்‍கைகள் மேற்கொண்டார்.

அருண் ஜேட்லியின் வாழ்க்கை வரலாறு.... பஞ்சாபி இந்து குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாக பிறந்தார். 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை டெல்லியில் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 1969 வரை பயின்றார். 

பொருளியல் இளங்கலைப் பட்டத்தை ஸ்ரீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1977இல் சட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார். தமது மாணவப் பருவத்தில் கல்வித் திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.

ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளனர். அருண் ஜேட்லி வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியானார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றினார். நிதி, கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக இருந்தார். 

பாஜகவைச் சேர்ந்த அருண் ஜேட்லி. அரசியலுக்கு வருவதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார்.1975ல் இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த அவசர நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார். அப்போது அவர் யுவ மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 

இதனால் அம்பாலா சிறையிலும், பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தார் ஜேட்லி. மோடி அரசில் பாதுகாப்புத்துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார் ஜேட்லி. 2009 -2019 வரையிலான கால கட்டத்தில்  மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

முதலீட்டு விலக்க துறை உருவாக்கப்பட்டது அதன் இணை அமைச்சராக முதலில் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீர் பிரதிநிதிகளுடன் பேசும் குழுவில் மத்திய அரசின் சார்பாக இடம் பெற்றார். 2018ல் மாநிலங்களவைக்கு 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 13 - மார்ச் 2017 முதல் 3 செப்டம்பர் 2017 வரை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். 2014 27 மே - 9 நவம்பர் 2014 - பாதுகாப்புத்துறை அமைச்சர். 2014 27 - மே 2014 - 14 மே 2018 வரை கம்பெனி விவகாரத்துறை அமைச்சர்.

இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தார். தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்தார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 

முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார். இருந்தும் மத்திய அமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் பதவி ஏற்றதால் அவர் சில மாதங்களிலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தோல்வி அடைந்தும் அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டது அப்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. ஆனாலும் அமைச்சரவையில் அதகளப்படுத்தியதும், பிஜேபி அரசியல் மற்றும் ஆட்சியிலும் தனது தடத்தை அழுத்தமாக பதித்தார் அதாவது ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது தான், நாட்டையே அதிரவைத்த பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற அதிரடியா அறிவிப்பை அசால்ட்டாக அறிவித்து நடவடிக்‍கைகள் மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய போது எதிர்க்கட்சிகளின், பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் அசத்தலாக பதில் சொல்லி சைலண்ட்டாக்கிய ஜேட்லி. ஜிஎஸ்டி வரியை ஒழுங்குப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைக்கப்பட்டு அதற்கு தலைவராகவும் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடத்த தேர்தலில் இவர் உடல் நிலையை காரணம் காட்டி அவர் தேர்தலில்  போட்டியிடவில்லை. 

click me!