மீண்டும் நிதியமைச்சர் பதவிக்கு திரும்புகிறார் அருண் ஜெட்லி.... குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

By vinoth kumarFirst Published Aug 23, 2018, 10:47 AM IST
Highlights

3 மாத ஓய்வுக்கு பிறகு அருண் ஜெட்லி மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

3 மாத ஓய்வுக்கு பிறகு அருண் ஜெட்லி மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் 3 மாதங்களாக தற்காலிகமாக ஓய்வில் இருந்து வந்தார்.

 

இந்நிலையில் அருண் ஜெட்லி வகித்து வந்த நிதித்துறை மற்றும் விவகாரத்துறை கூடுதல் பொறுப்போறுப்பை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வந்த அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதையடுத்து நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

 

இனி ரயில்வே அமைச்சர் பொறுப்பை மட்டும் பியூஸ் கோயல் கவனிப்பார். 2000-ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அருண் ஜெட்லி, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!