நிலைமை சீரடைய 3 ஆண்டு காத்திருக்க வேண்டுமாம் ..! அருண் ஜேட்லி சொல்கிறார்

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
நிலைமை சீரடைய 3 ஆண்டு காத்திருக்க வேண்டுமாம் ..! அருண் ஜேட்லி சொல்கிறார்

சுருக்கம்

மத்திய அரசு அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு குறுகிய காலத்துக்கே சிரமங்கள், பிரச்சினைகள் இருக்கும், ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பின், பொருளாதாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு நிச்சம் பலன் கிடைக்கத் தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் நேற்றுமுன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய, ஜெட்லி, பணத்தட்டுப்பாடு நீங்க 6 மாதம், அதன்சீரடையும் என்று கூறிய நிலையில், நேற்று 3 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டின் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

குறுகியகாலம்

மத்திய அரசு அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு மக்களுக்கு சிரமங்களைக் கொடுத்து வருகிறது என்பது எங்களுக்கு தெரியும். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை, செலவு ஆகியவற்றில் நீங்கள் சென்று கொண்டு இருக்கும் போது அதை விட்டு மாறும்போது, சில பிரச்சினைகள், சிரமங்கள் இருப்பது இயல்பு. ஆனால், இந்த சிரமங்கள் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று கூறமாட்டேன்.

3 ஆண்டுகள்

இந்த அறிவிப்பின் பலனை அடுத்த 12 முதல் 15 காலாண்டுகள் அதாவது, 3 ஆண்டுகளுக்குப் பின் பார்த்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

 வாழ்க்கையில் குறைவான ரொக்கப்பணம் பயன்படுத்துவது நடைமுறைக்கு வரும்போது, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து, ஊழல் இல்லாத நிலை உருவாகும். அரசுக்கு வரிவருவாய் அதிகரிக்கும், பொருட்கள் மீது குறைவான வரி இருக்கும், மிகவும் குறைந்த வட்டியில் வங்கியில் கடன்கிடைக்கும். வங்கிகளுக்கு வந்துள்ள அதிக டெபாசிட்டுகள் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர முடியும்.

வேகமான வளர்ச்சி

வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள நாடு என்பதை தக்கவைக்க, டிஜிட்டல் பொருளாதாரம், நவீனம் என்பது அவசியம். கடந்த 2 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை கொண்டுள்ளது, அதை தக்கவைப்பது அவசியம். இந்த ஆண்டும் அந்த பெயரை தக்கவைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி நடைமுறை தள்ளிப்போகுமா?

இந்த நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. குறித்து ஜெட்லி பேசுகையில், “ ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் செய்வதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காது. ஜி.எஸ்.டி. சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது என்றால், தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரி முறை , ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தபின்னும் அடுத்த ஓர் ஆண்டுக்கு தொடரலாம். ஆனால், அடுத்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதிக்கு பின் நடைமுறைப்படுத்துவதில் தாமதிக்க முடியாது.

செப்டம்பர் 16-ந் தேதிக்கு முன்பாக அந்த சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் சிக்கலை உண்டாக்கும். இல்லாவிட்டால் வரிவருவாய் இல்லாமல் அரசு இயங்க முடியாது. வரி வருவாய் மிகவும் அவசியம்'' என்றார்.

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: ஜெய்ப்பூரில் இரண்டு நாள் கூட்டம்! எப்போது அமலுக்கு வரும்? நிபுணர்கள் சொல்வது என்ன?
Forbidden Island: உள்ளே போனால் உயிரோட திரும்ப முடியாது! இந்தியாவின் பயங்கரமான தீவின் ரகசியம்