கெத்தாக இருந்த நித்தியை கொத்தாக தூக்க திட்டம்... சத்தமிட்ட ஆசாமியை சத்தமில்லாமல் முடிக்க சொன்ன அமித்ஷா..!

Published : Dec 29, 2019, 12:55 PM ISTUpdated : Dec 29, 2019, 12:58 PM IST
கெத்தாக இருந்த நித்தியை கொத்தாக தூக்க திட்டம்... சத்தமிட்ட ஆசாமியை சத்தமில்லாமல் முடிக்க சொன்ன அமித்ஷா..!

சுருக்கம்

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக, குஜராத் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்த வழக்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார்.

பாலியல் வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தாவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்து இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சர்ச்சைக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக, குஜராத் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்த வழக்கும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நித்யானந்தா, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவர் ஈக்குவடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் புதிதாக நாடு ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும் தினமும் சத் சங் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். 

இதற்கிடையே, திருச்சி நாவலூர் குட்டபட்டு மேலத்தெருவை சேர்ந்த ஜான்சி ராணியின் மகள் சங்கீதா கடந்த 2014-ம் ஆண்டு பிடதி ஆசிரமத்தில் இறந்தார். இவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக ஜான்சி ராணி குற்றம்சாட்டினார். சங்கீதாவின் மர்ம சாவு பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சங்கீதா சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜான்சிராணி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம், கர்நாடக அரசுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்யானந்தா வெளிநாட்டில் உள்ளார். நித்யானந்தாவை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக நித்யானந்தா மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பெற வேண்டும். அதன்பிறகு நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் விசாரணை அமைப்பு அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் மத்திய விசாரணை அமைப்புக்கு அளிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் ‘இண்டர்போல்’ மூலம் நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்படும். இதையடுத்து நித்யானந்தா இருக்கும் இடம் தெரிந்தவுடன் அவரை நாடு கடத்த வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். எனவே, நித்யானந்தா வழக்கில் கர்நாடக மாநில விசாரணை அமைப்பு உடனடியாக நித்யானந்தாவுக்கு எதிராக ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத் சங் என்று சத்தமிட்ட ஆசாமி நித்தியானந்தாவின் ஆட்டத்தை உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு ஆட்டம் காண வைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ED அலுவலகத்தில் ரெய்டு நடத்திய போலீஸார்..! பாஜக அதிர்ச்சி..!
ஜெட் வேகத்தில் பலமாகும் பாஜக..! இடிந்து விழும் கம்யூனிஸ்ட் கோட்டை.. பீதியில் காங்கிரஸ்..!