Army Helicopter Crash: இராணுவ ஹெலிகாப்டர் விபத்து..விமானி உயிரிழப்பு..துணை விமானி தொடர்ந்து கவலைகிடம்..

Published : Mar 11, 2022, 08:11 PM IST
Army Helicopter Crash: இராணுவ ஹெலிகாப்டர் விபத்து..விமானி உயிரிழப்பு..துணை விமானி தொடர்ந்து கவலைகிடம்..

சுருக்கம்

Helicopter crash: ஜம்மு காஷ்மீரில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் துணை விமானி கவலைகிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   

ஜம்மு காஷ்மீரின் குரேஸ் அருகே இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி வந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் பனி படர்ந்த பாரம் என்ற பகுதிக்குள் நுழைந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். மேலும் விமானிகள் இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

கடந்த வருடம் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்க்குள் மீண்டும் இந்திய ராணுவ ஹெலிகாபடர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் இன்று காலை ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டர் பகுதியில்  பறந்துக்கொண்டிருந்தது. அப்போது அதிகாலை பனி படர்ந்த பகுதிக்குள் நுழைந்தபோது, திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த விபத்தில் அந்த இராணுவ ஹெலிகாப்டரில் இருந்த விமானி பலியானார். மேலும் ஒரு துணை விமானிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது பெயர் வாஜ் சங்கல்ப் யாதவ் . அவரது வயது 29  போன்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த விமானி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இராணுவ தரப்பில் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!