விரைவில், மொபைல் ‘ஆப்ஸ்’ மூலம் பி.எப். பணம் பெறலாம்

 
Published : Apr 10, 2017, 09:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
விரைவில், மொபைல் ‘ஆப்ஸ்’ மூலம் பி.எப். பணம் பெறலாம்

சுருக்கம்

mobile for pf

விரைவில், மொபைல் ‘ஆப்ஸ்’ மூலம் பி.எப். பணம் பெறலாம்

இ.பி.எப்.ஓ. அமைப்பில் உள்ள 4 கோடி உறுப்பினர்களும் தங்கள் பி.எப். பணத்தைமொபைல் ஆப்ஸ் வழியாக பெறும் வசதி விரைவில்  அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாரேயா தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா பதில் அளித்தார். அவர் கூறியதாவது-

மொபைல் ஆப்ஸ்

இணையதளம் வழியாக பி.எப். உறுப்பினர்களின் விண்ணப்பங்களைப் பெற்று, ஆன்-லை் மூலமே தீர்வு காணும் முறையை இ.பி.எப்.ஓ. அமைப்பு கொண்டு வர உள்ளது. இதற்காக நவீன நிர்வாகத்துக்கு ஏற்ற வகையில் மொபைல் ஆப்ஸ் கொண்டு வர இருக்கிறோம்.

இந்த மொபைல் ஆப்ஸ் எப்போது வெளியிடப்படும் என்ற காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கவில்லை. ஆண்டுக்கு ஒருகோடி பேரின் ஓய்வூதியம், கூட்டு காப்பீடு உள்ளிட்ட விண்ணங்கள் பணியாளர்கள் மூலமாகவே தீர்க்கப்பட்டு, பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அனைத்தும் ஆன்-லைன் மூலம் தீர்வு காணப்படும்’’ என்று தெரிவித்தார்.

மே மாதம் இறுதி?

இதற்கிடையே பி.எப். அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் உள்ள 123 பி.எப். மண்டல அலுவலங்களை மத்திய சர்வரில் இணைக்கும் பணியில் 110 அலுவலகங்கள் இணைக்கப்பட்டு விட்டன. இன்னும் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது, மேலும், இவை இணைக்கப்பட்டபின், அது முறையாகச்செயல்படுகிறதா? என்பதையும் சோதித்து பார்க்க வேண்டும். இந்த பணிகள் வரும்மே மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!