அமிர்தசரஸ் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது: பிஎஸ்எப் படையினர் அதிரடி

By Pothy RajFirst Published Nov 29, 2022, 11:09 AM IST
Highlights

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து பறந்துவந்த ட்ரோன் விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து பறந்துவந்த ட்ரோன் விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

கடந்த இரு நாட்களில் எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுவீழ்த்தும்2வது ட்ரோன் இதுவாகும். இந்திய எல்லையான சாஹர்பூர் கிராமத்தின் மீது இந்தட்ரோன் பறந்தபோது, அதை எல்லைப் பாதுகாப்புபடையினர் கவனித்து அதை சுட்டு வீழ்த்தினர். 

நெருங்கும் குஜராத் தேர்தல்… ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்திவரவும், ஆயுதங்கள், தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை செய்யவும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ட்ரோன்களை பயன்படுத்துகிறார்கள் என்று எல்லைப் பாதுகாப்புப்படையினர் தெரிவி்க்கிறார்கள்.

சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன், ஹெக்ஸாகாப்டர் வகையைச் சேர்ந்தவையாகும். இந்த ட்ரோனின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் பாலிதீன் பை சுற்றப்பட்டு இருந்தது, பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியதும், சாஹர்பூர் கிராமத்தில் உள்ள சர்வதேசஎல்லைப்பகுதியில் ட்ரோன் கீழே விழுந்தது.

கடந்த 26ம் தேதி இதேபோன்று அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து ஒருட்ரோன் விமானம் இந்திய எல்லைக்குள் வர முயன்றது. அந்த ட்ரோனையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதான்கோட் அருகே சுட்டு வீழ்த்தினர். 

அரசு வேலை, வாக்களிக்க,பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு திட்டம்

கடந்த 2021ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில் 104 ட்ரோன்கள் மட்டுமே இந்திய எல்லைக்குள் வந்தநிலையில், 2022ம் ஆண்டில், 230 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் வந்துள்ளன. 2020ம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து 77ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் வர முயன்றபோது அதை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

2020ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் பகுதியில் 220 ட்ரோன்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

click me!