கேரளாவையே கலங்க வைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு...

 
Published : May 31, 2018, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
கேரளாவையே கலங்க வைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு...

சுருக்கம்

Another couple falls victim to rules in Kerala

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வெறுப்படைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. அவர்கள் பாப்பினஞ்சேரி அருகே உள்ள சுற்றுலா தலமான செசிபாறைக்கு சென்றனர்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்த கமல் குமாரும், அஸ்வதியும் அங்கிருந்த 270 அடி உயரபாறையில் இருந்து குதித்தனர். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் கமல்குமார், அஸ்வதியை காணாதது குறித்து அவர்களது பெற்றோர் பாப்பினஞ்சேரி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் காதல் ஜோடி பாறையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கமல் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாறை அருகே கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினார்கள். தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப் பி.கே. கல்லூரியைச் சேர்ந்த மாணவி நினுவை கடந்த வெள்ளிக்கிழமை (மே 25) வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு 1.30மணியளவில் கெவின், மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ஒரு கண் தோண்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். காதல் திருமணம் செய்த 48 மணிநேரத்தில் அரங்கேறிய இந்த கொலைச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்