இந்திய தேர்தல் புதிய ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்பு...!

Published : Jun 09, 2021, 06:13 PM IST
இந்திய தேர்தல் புதிய ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்பு...!

சுருக்கம்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்றுக்கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12ந்தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே பதவியேற்றுக்கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக கடந்த ஏப்ரல் 12ந்தேதி சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  சுசில் சந்திரா, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியில் இருந்து தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.  அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14ந்தேதி முடிவடைகிறது.

அவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரான சுஷில் சந்திரா, மத்திய சட்ட துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத்துக்கு, தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் பற்றி இன்று கடிதம் எழுதியுள்ளார்.  அதில், தேர்தலில் போட்டியிட கூடியவர்கள் தவறான தகவல்களை சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், 2 ஆண்டு சிறை தண்டனை வகை செய்யும் ஒப்புதல்கள் கோரப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையாளராக அனூப் சந்திர பாண்டே பதவி ஏற்றுக்கொண்டார்.  அவர், உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவம் கொண்டவர் ஆவார். வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவர் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பார். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவா் வகித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு