Omicron: தமிழகத்திற்கு சுத்துப்போடும் ஒமிக்ரான்.. அடுத்தடுத்து பக்கத்துக்கு மாநிலங்களில் பாதிப்பு..!

Published : Dec 12, 2021, 02:36 PM IST
Omicron: தமிழகத்திற்கு சுத்துப்போடும் ஒமிக்ரான்.. அடுத்தடுத்து பக்கத்துக்கு மாநிலங்களில் பாதிப்பு..!

சுருக்கம்

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவில் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழகத்தில் பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24ம் தேதி ஒமிக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

ஒமிக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஒமிக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமிக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் 35 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் ஒமிக்ரான் பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 17 பேருக்கு அங்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் 9, டெல்லி 2, குஜராத் 3, கர்நாடகா 2 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  முதல்முறையாக வெளிநாட்டிலிருந்து ஆந்திரா வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர் அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினம் வந்த  34 வயது நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. பக்கத்துக்கு மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதையடுத்து தமிழகத்தில் உஷார்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!