நிஜாமுதீனில் பங்கேற்றவர்களால் அந்தரத்தில் தொங்கும் ஆந்திரா!ஒரேநாளில் 43 பேருக்கு பாதிப்பால் முதல்வர் அதிர்ச்சி

By vinoth kumarFirst Published Apr 1, 2020, 5:00 PM IST
Highlights

 டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லீக் ஜமாஅத்  என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று விட்டு ஊர் திரும்பினர். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி மாநாட்டில் பங்கேற்று ஆந்திராவுக்கு திரும்பிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சிலர் அரசின் உத்தரவுகளை மீறி பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி வருகின்றனர். பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், வழிபாட்டுத் தலங்கள் என எங்கும் மக்கள் செல்லக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி சிலர் கூட்டம் போடுவதால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்நிலையில், டெல்லியின் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லீக் ஜமாஅத்  என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றுள்ளது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று விட்டு ஊர் திரும்பினர். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநாட்டில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் என 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சமூக விலகல் மேலும் கிடுக்கிப்பிடியாக இறுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!