இயற்கையின் அதிசயம்... சேமித்து வைத்து கொண்டு வெட்டும் போது பம்பு செட் போல் தண்ணீரை பீச்சி அடித்த மரம்! வீடியோ

Published : Apr 01, 2024, 05:05 PM ISTUpdated : Apr 01, 2024, 05:07 PM IST
இயற்கையின் அதிசயம்...  சேமித்து வைத்து கொண்டு வெட்டும் போது பம்பு செட் போல் தண்ணீரை பீச்சி அடித்த மரம்! வீடியோ

சுருக்கம்

ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள், 'இந்தியன் லாரல் மரத்தின்' எனப்படும் மரத்தை வெட்டி, அதில் இருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை காட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

இயற்கையின் அதிசயங்களை முன்பு, அதிநவீன தொழில்நுட்பங்கள் கூட தோற்று விடுகின்றன. அப்படி தான் தனக்குள் தண்ணீர் சேகரித்து வரும் மரம் குறித்த வீடியோவை ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்திய லாரல்  எனப்படும் இந்த மரத்தின் பட்டைகளை வெட்ட வெட்ட, தண்ணீர் குடம் குடமாக பீச்சு அடிக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோதாவரி பகுதியில் உள்ள பாபிகொண்டா மலைத்தொடரில் வசிக்கும் கொண்டா ரெட்டி பழங்குடியினர் இந்த தகவலை வனத்துறையினரிடம் பகிர்ந்து கொண்டதை தொடர்ந்து தற்போது இதுகுறித்து வனத்துறையிடம் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Premalu OTT Release Date: சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய லாரல் என அழைக்கப்படும், இந்த மரத்தின் அறிவியல் பெயர் Ficus microcarpa ஆகும். இது ஒரு வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல மரமாகும், இவ்வகை மரங்கள் பெரும்பாலும் ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதனை பலர் ஒரு அலங்கார மரமாக வளர்க்க நினைக்கின்றனர். இதில் உள்ள அடர்த்தியான இலைகள் பளபளப்பான பச்சை ஈட்டி போல் காணப்படுகிறது. மேலும் பல பறவைகளுக்கு வாழ்விடமாகவும் அமைகிறதாம். இதில் இருக்கும் பழங்களை பல பறவைகள் உண்டு பசியாறுகின்றன. வனத்துறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


 

PREV
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரம்! புடினை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!
மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!