Cheetahs:12 சிவிங்கிப் புலிகள் குவாலியர் வந்தன | தென் ஆப்பிரிக்காவிலிருந்து IAF விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன

By Pothy Raj  |  First Published Feb 18, 2023, 11:06 AM IST

தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 12 சிவிங்கிப் புலிகள்(cheetah) இன்று மத்தியப்பிரதேசம் குவாலியர் நகருக்கு கொண்டுவரப்பட்டன


தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் 12 சிவிங்கிப் புலிகள்(cheetah) இன்று மத்தியப்பிரதேசம் குவாலியர் நகருக்கு கொண்டுவரப்பட்டன

தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் காலை 10மணிக்கு குவாலியர் வந்து சேர்ந்தது குவாலியர் நகரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், ஷியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவுக்கு 12 சிவிங்குப் புலிகளும் கொண்டு செல்லப்பட உள்ளன.

Tap to resize

Latest Videos

ப்ராஜெக்ட் சீட்டா: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகள் நாளை இந்தியா வருகை

அங்கு கூண்டில் அடைக்கப்படும் 12 சிவிங்கிப் புலிகளும், தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் காட்டுக்குள் விடப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கிப் புலிகள் என மொத்தம் 12 சிவிங்குப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

ஏற்கெனவே 8 சிவிங்கிப் புலிகள் நமிபியாவில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சிவிங்கிப் புலிகளை பிரதமர் மோடி காட்டுக்குள் திறந்துவிட்டார். 

குவாலியர் நகரில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு ஐஏஎப் ஹெலிகாப்டர் மூலம் குனோ தேசிய பூங்காவுக்கு சிவிங்கிப் புலிகள் கொண்டு செல்லப்பட உள்ளன. அங்கு அரைமணிநேரம் கூண்டில் வைக்கப்பட்டு பின்னர் திறந்துவிடப்படும்.

கேள்வியும் கேட்கல! வர்றதும் இல்லை! எம்பி-யானபின் மவுனமாகிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று, சிவிங்கிப் புலிகளை காட்டுக்குள் திறந்து விடுகிறார்கள்.  

இந்தியாவில் சிவிப்புலிகள் இனம் கடந்த 1960களில் அழிந்துவிட்டது. இந்த சிவிப் புலிகள் இனத்தை மீள்உருவாக்கும் செய்யும் நோக்கில், நமிபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 8 சிவிங்புலிகள் 60ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு கொண்டுவர்பட்டன. இந்த புலிகள் தற்போது குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிடப்பட்டுள்ளன. இந்த 8 சிவிங்கிப் புலிகள் கழுத்திலும் கண்காணிப்பு பட்டை இருப்பதால், இதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிவிங்கிப் புலிகள் ஆரோக்கியமாக இருப்பதாக ப்ராஜெக்ட் சீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
 

click me!