என் கண் முன்னே என் கணவனை கொன்னுட்டாங்க... குழந்தையை கலைக்க மாட்டேன்! கதறும் கர்ப்பிணி

Published : Sep 17, 2018, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
என் கண் முன்னே என் கணவனை கொன்னுட்டாங்க... குழந்தையை கலைக்க மாட்டேன்! கதறும் கர்ப்பிணி

சுருக்கம்

தன் கண் முன்னே காதல் கணவன் ப்ரனய் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்த மனைவி அம்ருதா அதிர்ச்சியில் சுய நினைவை இழந்தார். தற்போது அம்ருதா மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். 

தன் கண் முன்னே காதல் கணவன் ப்ரனய் வெட்டிக் கொல்லப்பட்டதை பார்த்த மனைவி அம்ருதா அதிர்ச்சியில் சுய நினைவை இழந்தார். தற்போது அம்ருதா மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலங்கானா நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்தில் முடிந்த ப்ரனாய் - அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை  போராட்டங்கள் எல்லாம் இப்போது வீணாக போய்விட்டது. 

முதன்முதலாக அம்ருதாவை சந்தித்த போது ப்ரனய் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் படித்த பள்ளியில் அம்ருதா ஜூனியர். இருவரது வீடும் இரண்டு தெருக்கள் இடைவெளியில் தான் இருந்தது. இதனால், இருவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள முடிந்தது. இருவரும் காதல் வயப்பட்டார்கள். பள்ளிப் படிப்பை முடித்த ப்ரனய் தொழில் நுட்ப அறிவியல் துறையில் இன்ஞ்னீயரிங் படித்தார். அம்ருதா ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் இளங்கலை படித்தார்.

ப்ரனய் - அம்ருதா ஜோடியின் புகைப்படங்களை பார்த்தாலே அவர்கள் எவ்வளவு அன்போடு தங்களது வாழ்க்கையை தொடங்கி வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பது புரியும். கர்ப்பம் தரித்த பிறகு நலகொண்டாவில் உள்ள மருத்துவமனையில்தான் பரிசோதனைக்காக வந்து சென்றிருக்கிறார்கள். அப்படியொரு நாள் பரிசோதனைக்காக வந்த போதுதான்  தனது காதல் கணவரை கொடுமாக  பறிகொடுத்தார்.
 
ப்ரனயின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள்.   அம்ருதா அவர்கள் வீட்டிற்கே செல்லட்டும், இங்கு வந்தால் தங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கும் என ப்ரனய் குடும்பத்தினர் கூறுகிறார்கள். இதற்கு முன்பு கூட அம்ருதா வீட்டின் சார்பில் பலர் வந்து மிரட்டி சென்றிருக்கிறார்கள் என ப்ரனய் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அம்ருதா தனது வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். காதல் கணவன் இறந்து போனதை முதலில் மருத்துவர்கள் அம்ருதாவிடம் சொல்லவில்லை. தன் கண் முன்னே கணவன் வெட்டப்பட்ட கொடூரக் காட்சியை பார்த்த நேரத்தில் அம்ருதா மயங்கிவிட்டார்.   ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவரிடம் மருத்துவர்கள் எதுவும் சொல்லவில்லை.  நேற்று முன்தினம் தான் கணவன் இறந்ததை அவரிடம் கூறியிருக்கிறார்கள். 

ப்ரனய்யை தனது தந்தைதான் கொலை செய்திருப்பார் என்று அம்ருதா நிச்சயமாக கூறுகிறார்.

இதுகுறித்து அம்ருதா, என் கணவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்புதான் எனது தந்தை எனக்கு மீண்டும் போன் செய்தார். நான் அதை எடுக்கவில்லை. ப்ரனய் தாக்கப்பட்ட பிறகு நான் மீண்டும் அவருக்கு போன் செய்தேன்.

ஆனால், அவர் அலட்சியமாக பேசினார்.  மருத்துவமனைக்கு செல்வதற்கு முதல் நாளில்தான் எனது அம்மாவிற்கு போன் செய்து ப்ரனய் வீட்டில் நாங்கள் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ததை சொன்னேன். இந்தக் கொலைக்கு பின்னால் எனது தந்தையும், மாமாவும்தான் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அம்ருதா இப்போது மூன்று மாதக் கர்ப்பிணி என்பது முக்கியமானது. 

இதன்பிறகு அம்ருதா சொன்னதுதான் நெகிழ்ச்சியானது. “என்னுடைய கருவை நான் கலைக்க விரும்பவில்லை. ப்ரனய் எனக்கு அளித்துச் சென்ற பரிசாக நினைத்து அந்தக் குழந்தையை காப்பேன். ஒருபோதும் எனது தாய் தந்தையிடம் மீண்டும் செல்லமாட்டேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சிட்னி கடற்ரையில் துப்பாக்கிச்சூடு நடந்தியவர் இந்தியர்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
எல்லா சட்டத்துக்கும் இந்தி பெயர்.. இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் பாஜக.. ப.சிதம்பரம் காட்டம்!