இந்தியாவுக்கு தேசத்தந்தைகள் உள்ளனர், தேசத்தந்தையாக மகாத்மா காந்தி மட்டுமல்ல , நவீன இந்தியாவின் தேசத் தந்தையாக பிரதமர் மோடியும் உள்ளார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தேசத்தந்தைகள் உள்ளனர், தேசத்தந்தையாக மகாத்மா காந்தி மட்டுமல்ல , நவீன இந்தியாவின் தேசத் தந்தையாக பிரதமர் மோடியும் உள்ளார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ் நேற்று நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ இந்தியாவுக்கு இரு தேசத்தந்தைகள் உள்ளன. இன்று நவீன இந்தியாவின் தேசத்தந்தை பிரதமர் மோடிதான். முன்பிருந்த காலத்துக்கு தேசத்தந்தையாக மகாத்மா காந்தியை குறிப்பிடலாம்” எனத் தெரிவித்தார்
4 பேருக்கு உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு: பிரதமர் மோடி அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை
அம்ருதா பட்நாவிஸுன் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
துஷார் காந்தி கூறுகையில் “ அம்ருதா பட்நாவிஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்அமைப்பும் மோடியை புதிய இந்தியாவின் தந்தையாக அறிவிப்பதை வரவேற்கிறார்கள். மகாத்மா காந்தி நீண்டகாலம் வாழ்ந்திருந்தால், இப்போதுள்ள நவீன இந்தியாவை மறந்திருப்பார். மனுவாதி இந்து ராஷ்ட்ர பாரத்தின் தந்தையாக வேண்டுமானால் மோடியை அறிவித்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்
ஏன் எங்களுக்கு மட்டும்?பாஜக பேரணி நடத்துவது தெரியலையா? மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான யஷோமதி தாக்கூர் கூறுகையில் “ பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பின்பற்றுவோர் காந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயல்கிறார்கள். பொய்களை மீண்டும் மீண்டும் கூறி காந்தி போன்ற பெருந்தலைவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் வரலாற்றை மாற்றும் வெறி கொண்டவர்கள், இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
மகாரஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சமீபத்தில் சத்ரபதி சிவாஜி மகராஜாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பெரும் சிக்கலில் சிக்கினார். அவருக்கு எதிராக சிவசேனா உத்தவ்தாக்கரே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பெரும் பேரணி நடத்தி, போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.