இந்தியா மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா சூசகம்

By thenmozhi gFirst Published Sep 22, 2018, 6:39 PM IST
Highlights

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக டிரையம்ப் ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியதால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக டிரையம்ப் ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியதால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சகோய் ரக போர்விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் விலைக்கு வாங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்கா, எதிரிநாடுகள் மீது பொருளாதார தடைவிதிக்கும் சிஏஎடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதித்தது. இந்த நடவடிக்கை ரஷியாவிடம் இருந்து டிரையம்ப் ரக போர்விமானங்களை வாங்கிய இந்தியாவுக்கும் எச்சரிக்கையாக அமைந்துவிட்டது.

இது குறி்த்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்காவின் எதிரி நாடுகள் மீதுஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பில் ஈடுபடும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எங்கள் சட்டத்தில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

அது அந்த நாடுகளின் ராணுவ பலத்தை குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல. மாறாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அவதூறான செயல்களில் ஈடுபட்டுவரும் ரஷியாவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த சட்டத்தின் கீழ் சீன நிறுவனத்துக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டள்ளது.

ரஷியாவிடம் இருந்து ஆயுதக்கொள்முதலில் ஈடுபடும் மற்ற நாடுகளுக்கும் இது பாடமாக அமையும். பல்வேறு நாடுகள் இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளன. அது குறித்து இறுதியான முடிவு எடுக்கவில்லை. இந்த விஷயத்தின் தீவிரத் தன்மையைப் புரிந்து கொண்டு ரஷியாவிடம் இருந்து ஆயுதக்கொள்முதல் செய்யும் நாடுகள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து இறுதிமுடிவை எடுக்க வேண்டும்எனத் தெரிவித்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ்,  இந்த பொருளாாரத் தடை முற்றிலும் ரஷியாவுக்கானது. இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்தில் திருத்தம்கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.

tags
click me!