முடிந்தது ‘அம்பாசிடர்' காரின் சகாப்தம்

 
Published : Feb 12, 2017, 09:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
முடிந்தது ‘அம்பாசிடர்' காரின்  சகாப்தம்

சுருக்கம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ வாகனமாக வலம் வந்த அம்பாசிடர்கார் இனி இந்தியாவில் தயாரிக்கப் போவதில்லை, அந்த பெயரும் இனி உச்சரிக்கப்போவதில்லை.

பிரான்சை சேர்ந்த பியூகாட் நிறுவனத்துக்கு அம்பாசிடர் என்ற பிரான்ட், மாடல், டிரேட்மார்க் என அனைத்தும் ரூ. 80 கோடிக்கு இந்துஸ்தான் நிறுவனம் நேற்று முன்தினம் விற்பனை செய்தது.

சி.கே.பிர்லா தலைமையிலான இந்துஸ்தான் நிறுவனம் அம்பாசிடர் கார் தயாரிப்பை நிறுத்தி கடந்த 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்தபெயரையும், பிராண்டையும் பிரான்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டது.

கடந்த 1942ம் ஆண்டு அம்பாசிடர் கார் இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழிற்சாலை தொடங்கப்பட்டு, கடந்த 1958ம் ஆண்டு கார் உற்பத்தி தொடங்கியது.

1980களில், ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்கள் என்ற அளவில் உற்பத்தி பெருகியது. அதன்பின் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களான மாருதி, பியட், ஸ்டான்டர்ட், மகிந்திரா ஆகிய கார்களின் போட்டி காரணமாக படிப்படியாக உற்பத்தி குறைந்தது.

கடந்த 2013-14ம் ஆண்டில் அம்பாசிடர் கார் உற்பத்தி ஆண்டுக்கு 2,439 ஆக குறைந்தது. அதன்பின், நாள் ஒன்றுக்கு 5 கார்கள் மட்டும் முழுமையாக உற்பத்தியானது. கடந்த 2014ம் ஆண்டு மே 24-ந்தேதி அம்பாசிடர் கார் தயாரிப்பு உத்தர்பரா நகரில் முழுமையாக நிறுத்தப்பட்டது.

கடந்த 1960 முதல் 1970-களில் இந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசிடர் கார் என்பது கார் என்ற ரீதியில் மட்டும் மக்கள் மத்தியில் பார்க்கப்படவில்லை. இந்திய நகர்புறங்களின் அடையாளமாக இருந்தது. அன்னிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதித்து கார் தயாரிக்காத வரை, பெரும்பாலான வசதி படைத்தவர்களின் முக்கிய தேர்வாக அம்பாசிடர் கார்தான் இருந்தது என்றால் மிகையில்லை.

இது குறித்து சி.கே.பிர்லா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ அம்பாசிடர் காரின் பிராண்ட் விற்பனை செய்ய பிரான்ஸ் நிறுவனமான பியூகாட்டுன் முறைப்படியான ஒப்பந்தம் செய்துவிட்டோம். விரைவில் தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள்,பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் உள்ளிட்ட இதர விசயங்கள் முடிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

பிரான்சைச் சேர்ந்த பியூகாட் நிறுவனம் கடந்த 1990களில் இந்தியாவுக்குள் வந்து கார் விற்பனையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!