amit shah hindi: தமிழுக்கு போட்டி இந்தி மொழி அல்ல: பிராந்திய மொழிகளுக்கு நட்பு: அமித் ஷா பேச்சு

By Pothy RajFirst Published Sep 14, 2022, 5:04 PM IST
Highlights

இந்தி மொழி எந்த மொழிக்கும் போட்டி மொழி அல்ல. பிராந்திய மொழிகள் அனைத்துக்கும் நட்பு மொழி. ஒவ்வொரு மொழியும் வளர்வதற்கு சார்ந்தே செல்ல வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்

இந்தி மொழி எந்த மொழிக்கும் போட்டி மொழி அல்ல. பிராந்திய மொழிகள் அனைத்துக்கும் நட்பு மொழி. ஒவ்வொரு மொழியும் வளர்வதற்கு சார்ந்தே செல்ல வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்

இந்தி மொழி தினமான இன்று, குஜராத்தின் சூரத் நகரில் அனைத்து இந்திய அலுவல்மொழி மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது: 

மொழிகள் உயிர்பித்து இருக்க ஏற்றுக்கொள்ளும்தன்மை அவசியம். இந்தி மொழி தன்னை விரிவுபடுத்துவதற்கும், தனது அகராதியை விரிவுபடுத்தவும், பிற மொழிகளிலிருந்து வார்த்தைகளை எடுத்து நெகிழ்வாக மாற்ற வேண்டும்.இதைச் செய்யாவிட்டால் இந்தி மொழி நெகிழ்த்தன்மையானதாக இருக்காது, வளரவும் முடியாது.

பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அகற்றம்! விப்ரோ, பிரஸ்டீஜ், ஐடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

ஒரு விஷயத்தை நான் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சிலர் தவறான பிரச்சாரங்களை பரப்புகிறர்கள். அதாவது இந்தியும் குஜராத்தி மொழியும் போட்டி, இந்திக்கும், தமிழுக்கும் போட்டி, மராத்திக்கும், இந்திக்கும் போட்டி என்று பரப்புகிறார்கள்.

இந்தி மொழி எந்த மொழிக்கும் போட்டி மொழி அல்ல. நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தி மொழி நண்பன் என்பதை நீங்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.
பிராந்தி மொழிகள் வளர்ந்து செழிப்படையும் போது இந்திமொழியும் வளரும், இந்தி மொழி வளரும்போது பிராந்திய மொழிகளும் வளரும். இதை ஒவ்வொருவரும் ஏற்று, புரிந்துகொள்ள வேண்டும். 

நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மொழிகளின் இருப்பை நாம் ஏற்காத வரை, நம் சொந்த மொழியில் தேசத்தை நிர்வகிக்கும் கனவை நனவாக்க முடியாது. அனைத்து மொழிகளையும் தாய்மொழிகளையும் வாழ வைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மனப்பூர்வமாகச் சொல்ல விரும்புகிறேன். இந்த அனைத்து மொழிகளும் செழுமையாக இருந்தால் மட்டுமே இந்தி செழிக்கும்.

இந்தி மொழி அனைவரையும் உள்ளடக்கிய மொழி. பூர்வீக மொழியுடன் சேர்ந்து இந்தியையும் வலுப்படுத்த வேண்டும்.

பல்வேறு மொழிகளில் இலக்கியங்களை ஆங்கிலேயர்கள்தடை செய்தார்கள். இந்தியில் 264 பாடல்கள், உருதுவில் 58, தமிழலில் 19, தெலுங்கில் 10, பஞ்சாபி மற்றும் குஜராத்தியில் தலா22 பாடல்களை தடை செய்தனர். மராத்தியில் 123, சிந்தியில் 9 பாடல்கள், ஒடியாவில் 11, வங்கத்தில் 23, கன்னடத்தில் ஒருபாடல் என தடை செய்தனர்.

ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !

நம்முடைய பூர்வீக மொழிகள் எவ்வளவு வலிமையாக இருந்தால், சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்கள் இந்த மொழிப்பாடல்களைத் தடை செய்திருக்க வேண்டும். அந்நிய மொழிகளில் இருந்து எழும் சிந்தனைகளைவிட, உள்நாட்டு மொழி மூலம் எழும் சிந்தனைகள் மூலம் கொள்கைகளை உருவாக்கவேண்டும்.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்

click me!