இனி எதுக்கு தனித்தனிய... விரைவில் அறிமுகமாகிறது..... ரெயில், பஸ், மெட்ரோ அனைத்துக்கும் ஒரே டிக்கெட்

Asianet News Tamil  
Published : Nov 02, 2017, 06:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
இனி எதுக்கு தனித்தனிய... விரைவில் அறிமுகமாகிறது..... ரெயில், பஸ், மெட்ரோ அனைத்துக்கும் ஒரே டிக்கெட்

சுருக்கம்

all in one ticket ...maharastra govt order

 ெரயில், பஸ் , மெட்ரோ ரெயில் என அனைத்துக்கும் ஒரே டிக்கெட்டை அறிமுகம் செய்ய மஹாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையில் மாநகரத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், அலுவலகத்துக்கோ அல்லது பிற பயணங்களின்போதோ, ஒவ்வொரு போக்குவரத்து சேவைக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்காமல், ெரயில் மற்றும் பஸ் அல்லது டாக்ஸிக்கு ஒரே ஒரு ஸ்மார்ட் கார்டு வைத்திருந்தால் போதும்.

லண்டனில் செயல்படுத்தப்படும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மும்பையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டிசம்பரில் தொடங்கும் இந்த திட்டம் குறித்த விவரம் வருமாறு-

பஸ்-ரெயில் சேவை

மும்பை மாநகர் பகுதிக்கான இந்த திட்டத்தை வடிவமைக்கும் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல்வேறு நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரே டிக்கெட் முறையை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து, மும்பைக்கான திட்டத்தைக் கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தில், புறநகர் ெரயில் சேவை, பிரிஹன் மும்பை எலக்ட்ரிக் சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட்-ன்(பெஸ்ட்) பேருந்து சேவை,செம்புர் - வடாலா - ஜேகோப் சர்கிள் மோனோ ெரயில் சேவை ஆகியவை இணைக்கப்படும்.

 

தேவேந்திர பட்னாவிஸ்

இந்த திட்டத்தில் பயணிகள் ஸ்மார்ட் கார்டு வசதியுடன் அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த திட்டத்தின் படி, அனைத்து மெட்ரோ சேவையையும் முதலில் ஒன்றிணைக்கப்படும். இந்த சேவையில் ஏற்கனவே தானியங்கி கதவுகள் இருப்பது திட்டத்தை செயல்படுத்த வசதியாகியுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

அனைத்து மெட்ரோ சேவைகளையும் ஒன்றிணைத்த பிறகு, அதனுடன் பேருந்து சேவை இணைக்கப்படும். அதற்காக தற்போது பஸ் டிக்கெட் முறையில் புதிய தொழில்நுட்பத்தை மாற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகுதான் ெரயில் சேவையை இணைக்க முடியும். ஏன் என்றால் அதிகப்படியான உள்கட்டமைப்புகளை இதற்காக மாற்ற வேண்டும். தானியங்கி கதவு கொண்ட ெரயில் நிலையங்கள், ெரயில்களைக் கொண்டு வருவது போன்றவை இந்த திட்டத்தின் இறுதி கட்டத்தில் செய்து முடிக்கப்படும்.

 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு