ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி....கலாய்த்த இயக்குனர் வசந்த பாலன்....

 
Published : Jan 27, 2018, 02:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி....கலாய்த்த இயக்குனர் வசந்த பாலன்....

சுருக்கம்

Aishwarya Rai is a plastic blonde by Director Vasanthabalan

இயக்குனர் வசந்த பாலன் ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் அழகி என்று விமர்சித்துள்ளார்.


இயக்குனர் வசந்த பாலன்

ஆல்பம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் வசந்த பாலன்.அதன் பிறகு இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.அங்காடி தெரு படத்தின் மூலம் ஜவுளி கடைகளில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்களை வெளிக்காட்டி, அழுத்தமாக எடுத்திருப்பார்.இவர் ஐஸ்வர்யா ராயை பற்றி விமர்சத்திருப்பது சர்சைக்குள்ளாகியுள்ளது.


பத்மாவத்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் பல தடைகளை தாண்டி நேற்று வெளியான படம் பத்மாவத். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி ஒரு வழியாக வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பத்மாவத் படத்தை பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.



ஒவ்வொரு ஃபிரேமும் ஓவியம்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான பத்மாவதி திரைப்படம் கண்டேன். படம் பற்றி கொழுந்து விட்டெரியும் பிரச்சனைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. திரையின் ஒவ்வொரு பிரைமையும், பன்சாலியும், சுதீப் சட்டர்ஜியும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்கள்.


தீபிகா பேரழகி

ஒரு ஓவிய கண்காட்சியை கண்கொள்ளாமல் பார்த்தது போன்ற அற்புதமான அனுபவம். தீபிகா படுகோனே இந்தியாவின் அத்தனை அழகையும் ஒருங்கமைவு செய்த பேரழகி. தீபிகாவின் ஒவ்வொரு அசைவுகளும், அழகுடன் அபிநயம் பிடிக்கிறது.
ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி

ஐஸ்வர்யா ராய் பிளாஸ்டிக் அழகி.தீபிகா காமமும் காதலும் ததும்பும் பேரழகி. வேட்டையாட துடிக்கும் பேரழகு. ரன்வீர் சிங் அத்தனை நயங்களையும், நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவிலும், இயக்கத்திலும் இது நேர்த்தியான உன்னத படைப்பு.

பேரனுபவம்

ஒரு ஷாட்டும், அடுத்த ஷாட்டும் எத்தனை நளினமாக அழகியலுடன் கோர்க்கப்பட்டிருக்கிறது. அதிகாலை நேரத்தின் ஒளிச் சிதறல்களை, சுதீப் சட்டர்ஜி மிக அற்புதமாக அமைத்துள்ளார். 3d தொழில்நுட்பத்தில் படம் பார்த்தேன். ஆக மொத்தம் பேரனுபவம் என்று பதிவிட்டுள்ளார்.

வலுக்கும் கண்டனம்

இந்நிலையில் ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் அழகி என்று இயக்குநர் வசந்தபாலன் கூறியது, அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

இதுதான் மறுசுழற்சியா? கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய பீர் பாட்டில் கிறிஸ்துமஸ் மரம்!
உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!