இந்திய விமானப் படைக்கு புதிய தளபதி... மத்திய அரசு அறிவிப்பு..!

Published : Sep 19, 2019, 06:00 PM IST
இந்திய விமானப் படைக்கு புதிய தளபதி... மத்திய அரசு அறிவிப்பு..!

சுருக்கம்

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர் இம்மாதம் 30ம் தேதி விமானப்படை தளபதியாக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறார்.

 

தற்போதைய விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா ஓய்வு பெற உள்ளார். ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக உள்ளார். இந்திய விமானப்படை பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டதில் இருந்து மிகுந்த போராட்டங்களை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்திற்கு பிறகு பாகிஸ்தான் குரோதத்துடன் தாக்குதல் நடத்த காத்திருக்கிறது.

 

இந்நிலையில்  ஆர்.கே.எஸ்.பதாரியா பல்வேறு சவால்களை எதிர் கொள்ளும் வகையில் விமானப்படை தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவர் திறம்பட போர் விமானங்களையும், வீரர்களையும் வழிநடத்தும் ஆற்றல் பெற்றவர் என்பதால் மத்திய அரசு வரை விமானப்படை புதிய தளபதியாக அறிவித்துள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!