
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அதன் கேபின் குழுவினரின் ஒரு பிரிவினரின் போராட்டத்தின் காரணமாக அதன் 80க்கும் விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் மூலம் 20க்கும் அதிகமான வழித்தடங்களில் செல்லவேண்டிய பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இப்போதுவரை அந்நிறுவனத்தின் ஊழியர்கள் வேளைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சிரமங்களை எதிர்கொள்ளும் பயணிகளுக்கு உதவு ஏர் இந்தியா முன்வந்துள்ளது, அதன் துணை நிறுவனத்தின் 20 வழித்தடங்களில் தங்களது விமானங்களை இயக்குவதாகக் கூறியுள்ளது. இன்று 283 விமானங்களை இயக்கவுள்ளோம். நாங்கள் அனைத்து வளங்களையும் திரட்டிவிட்டோம், எங்களின் 20 வழித்தடங்களில் ஏர் இந்தியா இயக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி தேர்தல் களத்திலேயே இல்லை... மோடி 3.0 உறுதி... அரசியல் விமர்சகர் ஸ்ரின் திட்டவட்டம்
எவ்வாறாயினும், எங்கள் 85 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் அவர்களின் விமானம் இடையூறால் பாதிக்கப்பட்டுள்ளதா? என்பதைச் சரிபார்க்க எங்களுடன் பறக்க முன்பதிவு செய்தவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று விமான நிறுவனம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
"அவர்களின் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது 3 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, அவர்கள் வாட்ஸ்அப் எண் (+91 6360012345), அல்லது airindiaexpress.comல் Tia இல் எந்தக் கட்டணமும் இல்லாமல் முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது மறு தேதிக்கு தங்கள் பயணத்தை மாற்றலாம்" என்று அந்நிறுவனம் மேலும் கூறியது.
நேற்று புதன்கிழமையன்று, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்துள்ளது மற்றும் போராட்டக்காரர்கள் சிலருக்கு பணிநீக்கக் கடிதங்களை வழங்கியது என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த கேபின் பணியாளர்கள் வெகுஜன நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும விமான நிறுவனம் சுமார் 25 மூத்த கேபின் குழு உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதா? சர்ச்சையான பிரியங்கா காந்தி பேச்சு!