
அதிமுகவின் பொது செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழக முதலமைச்சராகவும், அதிமுகவின் பொது செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவுபட்டது.
அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். சசிகலா தற்காலிக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது.
இந்த நிலையில், சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதில், அதிமுகவின் பொது செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுகவில் பொது செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளதால், அதிமுக பொது செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.