"திரிணாமுல் காங்கிரஸிலும் கை வைக்கும் பாஜக" - 6 எம்எல்ஏக்கள் கட்சி தாவ ரெடி!!

 
Published : Aug 04, 2017, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
"திரிணாமுல் காங்கிரஸிலும் கை வைக்கும் பாஜக" - 6 எம்எல்ஏக்கள் கட்சி தாவ ரெடி!!

சுருக்கம்

6 mla ready to join bjp from trinamool congress

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு கட்சி மாறி வாக்களித்த 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பாஜக தலைவர் அமித்ஷாவைச் சந்தித்து, அக்கட்சியில் இணைய உள்ளனர். 

ஜனாதிபதி தேர்தலில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு கட்சி மாறி ஓட்டுப் போட்டார்கள்.

இதையடுத்து 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் விக்டர் ஷோம் கூறுகையில், 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார்கள பின்னர் முறைப்படி அவர்கள் பா.ஜனதாவில் இணையவுள்ளனர்.

இதனிடையே இந்த  6 எம்எல்ஏக்களும் வரும்  7-ந்தேதி அகர்தலாவில் நடைபெறும் கூட்டத்தில்  இணைப்பு விழாவை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!