
Ahmedabad Plane Crash : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே அச்சத்தில் மூழ்கடித்தது. இந்த விமானத்தை கேப்டன் சுமித் மற்றும் கமாண்டர் பிரல் கிளைவ் இருவரும் ஓட்டிச் சென்றனர். இவர்கள் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஏர் இந்தியாவிற்கு சொந்தமான டிரீம் லைனர் 787 போயிங் விமானம் 2 விமானிகள், 10 ஊழியர்கள் மற்றும் 242 பயணிகளுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டது. ஆனால், இந்த விமானம் குஜராத் மேகனி நகர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நாட்டையே அச்சத்திற்கு உள்ளாக்கியது. இந்த விமான விபத்தில் எத்தனை பயணிகள் உயிர் தப்பியிருப்பார்கள், எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற தகவல் ஏதும் இல்லாத நிலையில் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிகள் குறித்து முக்கிய தகவல் வந்துள்ளது.
அதன்படி கேப்டன் சுமித் மற்றும் கமாண்டர் பிரல் கிளைவ் இருவரும் ஓட்டிச் சென்றனர். இதில் கேப்டன் சுமித் சபர்வாலுக்கு 8200 மணிநேரம் எல்டிசி அனுபவம் உள்ளது. இதே போன்று கமாண்டரான கிளைவ் குந்தருக்கு 1100 மணி நேர விமான பயண அனுபவம் உள்ளது. இது விமானத்தை இயக்க போதுமான அனுபவமா என்பது சந்தேகம்தான்.
இந்த விமானத்தின் முதல் அதிகாரி யார்?
பொதுவாக எந்தவொரு விமானமாக இருந்தாலும் சரி 2 விமானிகள் இருப்பார்கள். அதில் ஒருவர் தான் கேப்டன். இவர்தான் விமானத்தை இயக்குவார். மற்றொருவர் பைலட். இவர் தான் முதல் அதிகாரி. இவர் தான் ஜூனியர் பைலட். இவர் 5 வருட பணி அனுபவம் பெற்ற பிறகு கேப்டன் பதவிக்கு தகுதி பெறுவார்.
எந்த ஓடுபாதையில் விபத்து ஏற்பட்டது?
அகமதாபாத்திலுள்ள ஓடுபாதை 23ல் தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதிலிருந்து தான் பிற்பகல் 1.39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டுகொஞ்ச நேரத்திலேயே ஏடிசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு விமானம் பதிலளிக்கவில்லை. ஓடுபாதை எண் 23லிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் வெளியாகவில்லை. இருந்த போதிலும் சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.