Agnipath Recruitment 2022: அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை மற்றும் கடற்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அக்னிபத் திட்டம்
இந்திய பாதுகாப்புப் படையில் இளைஞர்களை சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.இந்த திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயதினர் பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களில், 25 சதவீதத்தினர் மட்டுமே ராணுவப் பணியில் தொடர்வார்கள்.
மீதமுள்ளவர்களுக்கு ரூ.11-13 லட்சம் தொகையுடன் பணி ஓய்வு வழங்கப்படும். பெரும்பாலான இளைஞர்கள் நான்கு ஆண்டு மட்டுமே பணிபுரிந்து ஓய்வு பெற்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும், ராணுவ பணியில் இத்தகைய மாற்றங்கள் ஏற்கத்தக்கதல்ல என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி ?
ராணுவத்தில் 4 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17 அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் - கால அவகாசம்
இன்று காலை 10 மணி முதல் விமானப்படை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும், ஜூலை 5-ம் தேதி வரை அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு கால அவகாசம் உள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி முதல் 2005ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி வரையிலான கால கட்டத்திற்குள் பிறந்தவர்கள் அக்னி வீரர்களாகும் தகுதி படைத்தவர்கள் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!