உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றிக்காக டி.ஆர்.டி.ஓ. (DRDO) விஞ்ஞானிகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளையும் பாராட்டி இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், "Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ராவின் வெற்றி எங்களது DRDO விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது'' என்று… pic.twitter.com/GQrfkbLQgP
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், "MIRV தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றி பெற்றுள்ளது. இது DRDO விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.