மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் 6 குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலங்களாக குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் மேகி சாப்பிட விரும்புகிறார்கள்.
இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி. ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மேலும் 10 வயது அப்பாவி குழந்தை இறந்தது. இவர்கள் அனைவரும் மேகி சாப்பிட்டதாகவும், அதன் பிறகு அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹசாரா பகுதியில் உள்ள ராகுல் நகரில் நடந்துள்ளது. மேகி சாப்பிட்ட பிறகு, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
அதன் பிறகு அனைவரும் அவசரமாக உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், சிஎச்சி புரான்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் அனைவரும் குணமடைந்துள்ளனர்.ஆனால் 10 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?