கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கனியாரம் எனும் பகுதியில் கடந்த வாரம் 5 பன்றிகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? எவ்வாறு மூவர்ணக் கொடி உருவானது?
இதனால் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதே போன்று கடந்த வாரம் அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:India Corona: மிரட்டும் கொரோனா.. 22 ஆயிரத்தை நெருங்கும் ஒரு நாள் பாதிப்பு.. இன்று மட்டும் 60 பேர் பலி..
இந்த ஆப்பிரிக்க பன்றி காயச்சலானது மனிதர்களிடம் பரவாது . இருந்த போதிலும் பன்றியிலிருந்து மனிதர்கள் மூலமாக மற்ற விலங்களுக்கு பரவக்கூடியது. 1920 ஆம் ஆண்டும் ஆப்பிரிக்காவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டது.