இறப்பை பதிவு செய்ய ஆதார் தேவையில்லை - மத்திய அரசு

First Published Aug 5, 2017, 2:31 PM IST
Highlights
Adhar does not require death registration


இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்று நேற்று செய்திகள் வெளியானதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்றும் கூறியுள்ளது.

கருப்பு பணம் , பினாமி பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில், சொத்துக்கள் வாங்கும்போதும், விற்கும் போதும், பவர் ஆப் அட்டர்னி கொடுக்கும் போதும், ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.  

மேலும், மின்னணு அடிப்படையில், ஆதாரை அடையாளமாகக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இதன் மூலம், பினாமி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும், கருப்பு பணம் மூலம் ஏராளமான சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதும் தடுக்கப்படும். 

விரைவில் இது தொடர்பான வரைவு சட்டத்திருத்த மசோதாக்கள் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அதன்பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இதைதொடர்ந்து, தற்போது, இனிமேல் இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பிறகு இறப்பை பதிவு செய்யும்போது ஆதார் எண் அளிக்க வேண்டும் என்று நேற்று செய்திகள் வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த
நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

click me!