செல்லாத ஓட்டு போட்ட 16 பேர் - அமித்ஷா வேதனை!

First Published Aug 5, 2017, 1:34 PM IST
Highlights
16 votes are wasted says amitsha


கடந்த வாரம் இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் அனைத்து மாநில எம்பிக்களும், எம்எல்ஏக்கள் மட்டும் வாக்களிக்க வேண்டும். அதன்படி அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் வாக்களித்தனர். அதில், 77 வாக்குகள் செல்லாதவை என தெரிந்தது.

இதைதொடர்ந்து இதேபோன்று துணை ஜனாதிபதி தேர்தலில், தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என தேசிய பாஜக தலைவர் அமித்ஷா கூறினார்.

இதைதொடர்ந்து துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி, ஒத்திகை தேர்தல் நேற்று நடந்தது. அதில் 16 வாக்குகள் செல்லாதவையாக இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கவலை அடைந்தார்.

இதையடுத்து, மூத்த தலைவர்களின் ஆலோசனைபடி, தேர்தல் நடைமுறைகளை சரியாக பின்பற்றி, மீண்டும் இதுபோன்ற தவறு நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தினார்.

இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. பாஜக சார்பில் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் சார்பில் கோபால கிருஷ்ணகாந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தலில், எம்பிக்கள் மட்டுமே ஓட்டு போட வேண்டும். இந்த தேர்தலில், பூபிந்தர் யாதவ் போன்ற கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைபடி, வாக்களிக்க வேண்டும் என எம்பிக்களிடம் அவர் வலியுறுத்தினார். 

click me!