படகு கவிழ்ந்து 21 போ் உயிரிழப்பு : கங்கையாற்றில் நிகழ்ந்த சோகம்!

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
படகு கவிழ்ந்து 21 போ் உயிரிழப்பு : கங்கையாற்றில் நிகழ்ந்த சோகம்!

சுருக்கம்

பீகார் தலைநகர் பாட்னாவில் கங்கையாற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பாட்னாவில் மகர சங்கராந்தியையாெட்டி காெண்டாடப்பட்டு வருகிறது. சபல்பூரில் நடைபெற்ற பட்டம் விடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், நாட்டு படகு ஒன்றில் 40-க்கும் அதிகமானோர் கங்கையாற்றை கடக்க முயன்றுள்ளனா்.  அதிக சுமை காரணமாக திடீரென படகு கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததனா்.  மேலும் மருத்துவமனையில் 9 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பீகாரில் மாேடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!