40 பயணிகளுடன் சென்ற ஏ.சி.  பஸ் தீப்பிடித்து எரிந்த காட்சி

 
Published : Feb 21, 2017, 10:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
40 பயணிகளுடன் சென்ற ஏ.சி.  பஸ் தீப்பிடித்து எரிந்த காட்சி

சுருக்கம்

ஐதராபாத்தில் இருந்து வாரங்கல் நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான வால்வோ பஸ் தீடிரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

ஐதராபாத்தில் இருந்து வாரங்கல் நோக்கி, ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான வால்வோ ஏ.சி. பஸ்(AP29Z 3990) ேநற்று புறப்பட்டது. பஸ்ஸில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நலகொண்டா மாவட்டம் அலர் நகரம் அருகே வந்தபோதுபஸ்ஸில் பின்புறத்தில் இருந்து கரும்புகை வந்தததை பயணிகள் கவனித்து, டிரைவரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக டிரைவர், பஸ்ஸை சாலை ஓரமாக நிறுத்தியதையடுத்து, பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் இறங்கிய சில நிமிடங்களில் பஸ்முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

இந்த தீவிபத்து குறித்து தீ அணைப்பு துறையினருக்கும், போலீசுக்கும் பயணிகளும், டிரைவரும் தகவல் கொடுத்தனர். ஆனால், அரை மணிநேரத்துக்கு பின் ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் வந்தார்.

அவர் பார்க்கும் போது, பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்