மீண்டு வா தமிழா… உன் நெஞ்சுரத்துக்கு ஒரு ராயல் சல்யூட் !! அபி நந்தனுக்காக கவிதை வெளியிட்ட மகபூப் பாஷா !!

By Selvanayagam PFirst Published Feb 27, 2019, 11:02 PM IST
Highlights

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கச் சென்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினரின் பிடியில் சிக்கிக் கொண்ட தமிழக விமானி அபி நந்தன் மீண்டு வர வேண்டும் என்று உலகம் முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் வந்துள்ள நிலையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகபூப் பாஷா என்பவர் மீண்டு வா தமிழா என்று எழுதிய கவிதை வைரலாகி வருகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை தகர்த்தெறிந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. 

இதையடுத்து  எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் விமானி அபிநந்தனை காணவில்லை என தகவல் வெளியாகியது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் விமானி அபினந்தன் உள்ளது உண்மைதான் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிநந்தனின் வீடு சென்னை சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ளது. மாடம்பாக்கத்தில் அபிநந்தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.

இதையடுத்து அவரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மகபூப் பாஷா தனது வாட்ஸ் அப்  பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் உனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும்…எங்களை கொதிப்படைய செய்கிறது… தமிழா உனது தியாகம் …. தமிழா உனது வீரம் … தமிழா உனது நாட்டுப்பற்று …. சல்யூட் சகோதரா... நீ மிருகங்களிடமிருந்து மீண்டு வரும் வரை எங்களது ஒவ்வொரு நினைவும் உன்னை சுற்றியே... மீண்டுவாதமிழா ஆண்டவனை வேண்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கவிதை தற்போது வைரலாகி வருகிறது. நாட்டுப் பற்று மிகுந்த இம் மண்ணின் மைந்தர்கள் சாதியோ, மதமோ, மொழியோ, இனமோ பார்ப்பதில்லை என்பதை மகபூப் பாஷாவின் கவிதை உணர்த்தியுள்ளது.        

click me!