சலூன்களில் அபிநந்தனைப் போல மீசை வைக்க குவியும் இளைஞர்கள்... உலகம் முழுவதும் ட்ரெண்டான வீரத் தமிழன்!

By sathish kFirst Published Mar 3, 2019, 8:22 PM IST
Highlights

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பலர் சலூன்களுக்கு சென்று அபிநந்தனைப் போல தாங்களும் மீசையை வைத்துக்கொண்டு அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை, 2 நாட்கள் பாகிஸ்தான் இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, அதன்பிறகு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானால் அமைதி நல்லெண்ணத்தின்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அபிநந்தன் நாடு முழுவதும் நிஜ ஹீரோவாக உருவாகியிருக்கிறார். விடுதலை செய்வதாகப் பிப்ரவரி 28ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருந்தார்.

அதன்படி சிறைபிடிக்கப்பட்டு இரு தினங்களுக்குப் பிறகு நேற்று  முன் தினம் மாலை வாகா எல்லைக்கு அபிநந்தன் அழைத்து வரப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கும் அபிநந்தனை புகழ்ந்தும் வரவேற்றும் சமூக ஊடகங்களில், வாழ்த்து சொல்லும் அதே வேளையில் புதிதாக பிறக்கும் குழந்தைக்கு "அபிநந்தன்" என பெயர் சூட்டி மரியாதை செய்து மகிழ்கின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் தனி ஆளாக இருக்கும்போதிலும், தன் கண்கள் கட்டப்பட்டு, தாக்கப்பட்டதில் முகத்தில் காயம் ஏற்பட்டு நிற்கும்போதும் அவர் கம்பீரம் குறையாமல் செம்ம கெத்தாக வீடியோவில் பேசியது.  நிதானம் இழக்காமல் செம்ம கெத்தாக பேசியது நாடி நரம்புகளை முறுக்கேற வைத்திருந்தது. 

 அதுமட்டுமல்ல, ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக ஸ்டைலாக பேசியது இந்திய நாட்டு மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம்பிடித்தார். அவர் வைத்திருக்கும் கம்பீர மீசையைப் போலவே மாவீரனாக காணப்பட்டார். அவரது அந்த தாறுமாறான உடலுக்கு ஏற்ற கம்பீரமான மீசை வலுசேர்த்தது. வீரத்தமிழ் மகன் சேர்ந்த அபிநந்தன் தமிழ்நாட்டு ஸ்டாலில் நீண்ட பெரிய மீசை வைத்திருந்தார். 

சமூக ஊடகங்களில் அவரது அந்த மிடுக்கான மிரட்டலான தோற்றம் மிரள வைத்தது. இது ஒருபுறம் இருக்க, அபிநந்தன் வைத்திருக்கும் கன்ஸ்லிங்கர் மீசை தற்போது நாடு முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் பலர் சலூன்களுக்கு சென்று அபிநந்தனைப் போல தாங்களும் மீசையை வைத்துக்கொண்டு அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

click me!