ஆதார் எண் காலத்தின் கட்டாயம்... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

By vinoth kumarFirst Published Sep 26, 2018, 11:56 AM IST
Highlights

அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
 உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னால் தற்போது ஆதார் குறித்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நீதிபதிகளாக தீர்ப்பை வாசித்து வருகிறார்கள். ஆதார் வழக்கு, நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற வழக்காக இருக்கிறது.

 

12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவ அடையாளம் என்பது அரசமைப்பு சட்டமைப்பு ரீதியானதா? அல்லது அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானதா? தனிமனித அந்தரங்க உரிமையை மீறுகிறதா? என்பது தொடர்பான வழக்கு 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் தீர்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆதார் எண் கட்டாயம் என்று 3 நீதிபதிகள் சார்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

நீதிபதி சிக்ரி கூறும்போது, ஆதார என்பது போலியாக உருவாக்க முடியாது என்றும், ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஆதார் எண் அதிகமாக பேசப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. போலி ஆதார் அட்டை தயாரிக்க முடியாது.

 

இது தனித்துவமானது. ஆதார் விவரங்கள் கசியக் கூடாது என்பதற்காக தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஆதார் தேவை இல்லை என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றக்கொள்ளவில்லை. அதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புது சட்டம் இயக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அரசு வேலை வாய்ப்பு பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  அதேபோல், சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நீட், சி.பி.எஸ்.இ.-க்கு ஆதார் கட்டாயம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

click me!