10 லட்சம் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை தூக்கி வீசிய தொழிலாளி: தேடிக்கண்டுபிடித்து டெபாசிட் செய்த நண்பர்!

By vinoth kumarFirst Published Sep 26, 2018, 10:57 AM IST
Highlights

10 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட் எனத் தெரியாமல் தொழிலாளி கசக்கி எறிந்த லாட்டரி டிக்கெட்டை அவரின் நண்பர் தேடிக்கண்டுபிடித்து தனது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ததுள்ளார்.

10 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட் எனத் தெரியாமல் தொழிலாளி கசக்கி எறிந்த லாட்டரி டிக்கெட்டை அவரின் நண்பர் தேடிக்கண்டுபிடித்து தனது பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ததுள்ளார். திருவனந்தபுரம் அருகே பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜினு(35). இவர் கூலித்தொழிலாளி. இவரின் மகனுக்கு இதயக்கோளாறு இருந்ததால், பல்வேறு நண்பர்களிடம் கடன் பெற்று சிகிச்சை அளித்து வந்தார். 

அஜினுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்தது. கடந்த 22-ம்தேதி காருண்டா பிளஸ் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதில் அஜினு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு 2-வது பரிசான ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது.  இதை அறியாத அஜினு தனக்கு பிரிசு கிடைக்கவில்லை என நினைத்து கீழே வீசி எரிந்துவிட்டார். ஆனால், அஜினுவின் நண்பர் அனீஷ் கிருஷ்ணனுக்கு அஜினு வாங்கிய டிக்கெட்டுக்கு 2-வது பரிசு கிடைத்திருப்பது தெரிந்தது. 

இதையடுத்து, அஜினுவிடம் என்று லாட்டரியில் பரிசு விழுந்ததா எனக் கேட்டார். அதற்கு அவர், இல்லை எனக் கூறி, அதை வீசிஎரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து அனீஷ் யாருக்கும் தெரியாமல் அந்த லாட்டரி டிக்கெட்டை தேடிக்கண்டுபிடித்து, அதை வங்கியில் தனது பெயரில் டெபாசிட் செய்து கொண்டார். இதனிடையே அஜினு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்குத்தான் ரூ.10 லட்சம் பரிசு விழுந்தது தெரியவந்தது. ேமலும், தன்னை ஏமாற்றி தனது நண்பர் அனிஸ் லாட்டரி டிக்கெட்டை அவரின் பெயரில் டெபாசிட் செய்த விவரமும் தெரியவந்தது. உயிர் நண்பனே துரோகம் செய்தது நினைத்து வருந்தினார். 

இதையடுத்து, அனிஷ் தரப்பில் அஜினுடன் பேச்சு நடந்தது. இதில் பரிசுத்தொகையில் பாதிதொகையை அஜினுவுக்கு தருவதாக கூறப்பட்டது. இதற்கு அஜினு உடன்படவில்லை. இதையடுத்து அவர் பாலக்கோடு போலீஸில் புகார் செய்தார். இதை அறிந்த அனிஸ் கிருஷ்ணன் தலைமறைவானார்.

click me!