
ஆதார் விவரங்களை பதிவு செய்வும், திருத்தம் செய்யவும் நாடுமுழுவதும் ஆயிரம் வங்கிகளைகளில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதில் 42 தனியார் வங்கிகளும், மீதமுள்ளவை அரசு வங்கிகள் என்று ஆதார் வழங்கும் உதய் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், “ சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் வசதிக்காக ஆதார் எண் பதிவு செய்வது, திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக 15 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் வங்கிகளில் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 42 தனியார் வங்கிகள், மீதமுள்ளவை அரசு வங்கிகளாகும்’’ என்றார்.
அனைத்து வங்கிகளும் 10 கிளைகளுக்கு ஒரு கிளை வீதம் ஆதார் பதிவு மையங்களை ஆகஸ்ட் இறுதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. போதுமான அவகாசம் வேண்டும் என வங்கிகள் கேட்டுக்கொண்டதையடுத்து, செப்டம்பர் இறுதிவரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அவ்வாறு வசதிகளை ஏற்படுத்தாத வங்கிகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.