
சொத்துக்களை வாங்கவும் விற்கவும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
உர மானியம், கேஸ் மானியம் பெற ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்திருந்த நிலையில், இனிவரும் காலங்களில் சொத்துக்கள் வாங்கவும், விற்கவும், ஆதார் எண் கட்டாயமாக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் வாங்க, விற்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதால், முறைகேடுகளை தடுக்க பேருதவியாக இருக்கும். கருவிழி, கைரேகை பதிவு செய்யப்படுவதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜன்பூஷன் பாண்டே கூறும்போது, சொத்துக்கள் வாங்க, விற்க ஆதார் எண் கட்டாயமாக்கப்டும் என்றார்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதால் சொத்துக்கள் வாங்குவதில் ஏற்படும் சிக்கல்கள் தீரும். கைரேகைகள், கருவிழி பதிவு செய்யப்படுவதால் சொத்துக்கள் அல்லது மனைகளை வாங்கும்போது ஏற்படும் சிக்கல்கள் தீரும் என்று கூறினார்.