
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடு போன விவகாரத்தில், ராஜாஸ்தானை சேர்ந்த ஒரு இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஜியோவின் சேவை மற்றும் மக்கள் மத்தியில் ஜியோ பெற்றிருக்கும் உயரிய இடத்தை யாராலும் மறைக்கவும் முடியாது அதே வேளையில் மறுக்கவும் முடியாது. காரணம் அந்த அளவிற்கு இலவச வாய்ஸ் கால்ஸ் மற்றும் டேட்டா சேவையை வாரி வாரி வழங்கி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும்
12 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள்
ஜியோவின் சேவையை இதுவரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு, Magic.com என்ற இணையதளத்தில் வெளியானதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதற்கு ஜியோ மறுப்பு தெரிவித்தது.
ஒருவர் கைது
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து கணினி, செல்போன்கள் என அனைத்தும் கைப்பற்றப் பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது