
சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாக கூறி, இலங்கை பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பமீலா பெங்களூருவை சேர்ந்த சதீஸ் பாட்டீல் 2015ம் ஆண்டு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் நண்பர்களாக பழகினர். அப்போது சதீஸ் பாட்டீல், பமீலாவிடம் நீ அழகாக இருக்கிறாய். உனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன். இந்தியா வந்து விடு என்று அழைத்துள்ளார்.
மேலும், அந்த இளைஞர் ஒருவர் அவருக்கு நண்பர் லிஸ்டில் இருக்கும் இந்தி சின்னத்திரை நடிகர் ஒருவரை முகநூல் வாயிலாக காட்டி, இவரை எனக்கு நன்றாக தெரியும். நீ மும்பை வந்தால், அவரிடம் பேசி உனக்கு சான்ஸ் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய இலங்கைப் பெண் பமீலா கடந்த 2017ம் ஆண்டு நவ.28ம் தேதி விமானம் மூலம் வந்து இறங்கினார். பமீலாவுடன் அவரது தாயாரும் வந்திருந்தார். மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர்.
டிச.1ம் தேதி பமீலாவை நேரில் சென்று சந்தித்த சதீஸ், சின்னத்திரை நடிகரை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது பமீலாவின் தாயை அவர் அழைத்துச் செல்லவில்லை. இடையூறாக இருக்கும் என்று ஓட்டலிலேயே விட்டுச் சென்றனர்.
நடிகரை சந்திப்பதற்காக சென்ற இருவரும், மற்றொரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
முன்னதாக பமீலாவிடம், சின்னத்திரை நடிகர் இந்த ஓட்டலுக்குதான் வருவார் என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய பமீலா ஓட்டலில் காத்திருந்தார். அப்போது சதீஸ், குளிர்பானம் ஒன்றை பமீலாவிற்கு கொடுத்தார். அதை வாங்கி குடித்த பமீலா மயங்கினார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சதீஸ், பமீலாவை பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, பமீலாவிற்கு தான் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
வெளியே வந்த அவர் சதீஸிடம் விசாரித்தபோது, அவர் சினிமா வாய்ப்பு வேண்டுமென்றால் இதனை பொறுத்துக் கொள்ளவேண்டுமென்று கூறியிருக்கிறார். இதையடுத்து அதை வெளியே கூறாமல் மறைத்த பமீலா, சினிமா வாய்ப்பிற்காக காத்திருந்தார். இதே போல சொல்லி சொல்லியே பலமுறை அவரை கற்ப்பழித்திருக்கிறார்.
ஆனால் சதீஸ், அவருக்கு இதுவரை எந்த வாய்ப்பையும் வாங்கித் தரவில்லையாம். மாறாக கன்னடப் படத்தில் வாய்ப்பு வாங்கித் தருவதாக பெங்களுருக்கு அழைத்து வந்து அழைத்து வந்து, அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கி செலவு செய்ததுதான் மிச்சம். இறுதியாக சதீஸ், தாய் - மகள் இருவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பெங்களுரு மெஜஸ்டிக்கில் இருந்து, கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு செல்லும் பஸ்சில் ஏற்றி விட்டு, சென்றுவிட்டார். பஸ்சில் ஏறியிருந்த போதுதான், பமீலா நடந்த சம்பவத்தை தாயிடம் கூறினார்.
மகள் சொன்ன விஷயத்தை கேட்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே இதற்கு நியாயம் கிடைக்காமல் சொந்த ஊர் செல்லக்கூடாது என்று அருகேயிருந்த உப்பார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மோசடி மன்னன் சதீ்ஸ் பாட்டீலை கைது செய்தனர். அவர் மீது பாலியல் பலாத்காரம், மோசடி உள்பட இருவேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.