
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்து அவரை கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட உறவினர்கள் உள்பட 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் உஷா., 35 வயது நிரம்பிய இவரை அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் கடந்த ஜனவரி 30-ந்தேதி கொடுவள்ளியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த கடையின் மாடியில் வைத்து அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்து, அந்த 6 பேரும் மாற்றி,மாற்றி அந்த பெண்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்..
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து கடந்த 24ந் தேதி கொடுவள்ளி காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட உறவினர்கள் உள்பட 6 பேரை கொடுவள்ளி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோழிக்கோடு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.